தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்வு, சமத்துவம், சுயமரியாதை , சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் அவரது தொலைநோக்குப் பார்வையைச் செயலாக்க மக்களை ஒன்றிணைக்கிறது. அனைவரும் ஒன்றுகூடி, இணைந்து மேற்கொள்ளும் நடைப்பயணம் , நாம் உருவாக்க விரும்பும் சமூகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்த நம்முடைய பார்வையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ, சக பணியாளர்களுடனோ அல்லது தனியாகவோ நீங்கள் வந்தாலும், ஒவ்வொரு அடியும் சமூக நீதி குறித்த உரையாடலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பெரிய இயக்கத்தின் பகுதியாகும்.
பெரியார் நடைப்பயணம் / ஓட்டம், இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த அனைவருக்கும் சமூக நீதி என்ற கருத்தையொட்டி மக்களை ஒன்றிணைக்கிறது.
இந்த நடைப்பயணமும், ஓட்டமும் பெரியாரை நினைவுகூரும் நிகழ்வு என்பதுடன், நமது எதிர்காலத்தை நோக்கிய பார்வையுமாகும். இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உரையாடல்களைத் தொடங்குவதற்கும், சமத்துவம், சுயமரியாதை , சம வாய்ப்பு ஆகியவற்றை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வதற்கும் உரியதாகும்.
ஆகவே, உங்கள் காலணிகளை அணிந்துகொண்டு, உங்கள் அன்புக்குரியவர்களையும் உடன் அழைத்து வாருங்கள். நாம் கடக்கும் தொலைவை விடப் பெரியதொரு நோக்கத்திற்காக நடக்கும் இப் புலர் காலை நிகழ்வில் நீங்களும் ஓர் அங்கமாகுங்கள்!
அர்த்தமுள்ள மாற்றத்திற்காக நடப்போம்.
ஒரே நடைப்பயணம், அனைவரும் ஒன்றிணைந்து.
சமத்துவம் மற்றும் நீதியின் மூலம் இணைவோம்.
அவரது கொள்கை மரபைப் போற்றும் வகையில் நடப்போம்.
நடப்போம், ஆதரவளிப்போம் அல்லது பங்கேற்போம்.
சமத்துவம் மற்றும் நீதியின் மூலம் இணைவோம்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே கிளிக் செய்யவும்
உங்கள் பேராதரவுக்கு நன்றி!
4 அக்டோபர் 2026 அன்று சந்திப்போம்.